×

ஒன்றிய அரசை கண்டித்து ஊட்டியில் தொழிற்சங்கத்தினர் மறியல்: 280 பேர் கைது

ஊட்டி : ஒன்றிய அரசை கண்டித்து ஊட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எல்பிஎப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சேர்ந்த 280 பேரை போலீசார் கைது செய்தனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள 30 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும்.

மேலும் தொழிலாளர் விரோத போக்கை கையாளும் ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏடிசி பகுதியில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட கூட்டு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார். எல்பிஎப் கவுன்சில் செயலாளர் ஜெயராமன், ஏஐடியுசி போஜராஜன், சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தொடர்ந்து ஏடிசி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதில் அங்கன்வாடி, ஆஷா, மின்வாரியம், போக்குவரத்து, டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஊட்டி, கூடலூர் பந்தலூரில் மறியலில் ஈடுபட்ட மொத்தம் 280 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஊட்டியில் தொழிற்சங்கத்தினர் மறியல்: 280 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trade unions ,Ooty ,Union government ,LPF ,Dinakaran ,
× RELATED குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு...